தானத்தத் தான தானன தானத்தத் தான தானன
தானத்தத் தான தானன ...... தந்ததான
வாய்விட்டுப் பேசொ ணாதது ...... நெஞ்சினாலே
மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது
மாயைக்குச் சூழொ ணாதது ...... விந்துநாத
ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது
லோகத்துக் காதி யானது ...... கண்டுநாயேன்
யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி
யூனத்தைப் போடி டாதும ...... யங்கலாமோ
ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய
லாகிப்பொற் பாத மேபணி ...... கந்தவேளே
ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காள மோடட
ராரத்தைப் பூண்ம யூரது ...... ரங்கவீரா
நாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள்
நாடிற்றுக் காணொ ணாதென ...... நின்றநாதா
நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலை
நாதர்க்குச் சாமி யேசுரர் ...... தம்பிரானே.
பாடல்
வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாததுவாய்விட்டுப் பேசொ ணாதது ...... நெஞ்சினாலே
மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது
மாயைக்குச் சூழொ ணாதது ...... விந்துநாத
ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது
லோகத்துக் காதி யானது ...... கண்டுநாயேன்
யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி
யூனத்தைப் போடி டாதும ...... யங்கலாமோ
ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய
லாகிப்பொற் பாத மேபணி ...... கந்தவேளே
ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காள மோடட
ராரத்தைப் பூண்ம யூரது ...... ரங்கவீரா
நாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள்
நாடிற்றுக் காணொ ணாதென ...... நின்றநாதா
நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலை
நாதர்க்குச் சாமி யேசுரர் ...... தம்பிரானே.
பதம் பிரித்தல்
வாசித்துக் காண ஒணாதது, பூசித்துக் கூட ஒணாதது,வாய்விட்டுப் பேச ஒணாதது, ...... நெஞ்சினாலே
மாசர்க்குத் தோண ஒணாதது, நேசர்க்குப் பேர ஒணாதது,
மாயைக்குச் சூழ ஒணாதது, ...... விந்துநாத
ஓசைக்குத் தூரம் ஆனது, மாகத்துக்கு ஈறு அது ஆனது,
லோகத்துக்கு ஆதி ஆனது ...... கண்டு, நாயேன்
யோகத்தைச் சேருமாறு, மெய்ஞ் ஞானத்தைப் போதியாய், இனி
ஊனத்தைப் போடிடாது ......மயங்கல் ஆமோ?
ஆசைப்பட்டு ஏனல் காவல்செய் வேடிச்சிக்காக மா மயல்
ஆகிப் பொன் பாதமே பணி ...... கந்தவேளே!
ஆலித்துச் சேல்கள் பாய்வய லூர் அத்தில் காளமோடு அடர்
ஆரத்தைப் பூண் மயூர! து ...... ரங்கவீரா!
நாசிக்குள் ப்ராண வாயுவை ரேசித்து, எட்டாத யோகிகள்
நாடிற்றுக் காணெ ஒணாது என ...... நின்றநாதா!
நாகத்துச் சாகை போய்உயர் மேகத்தைச் சேர் சிராமலை
நாதர்க்குச் சாமியே! சுரர் ...... தம்பிரானே.
Comments
Post a Comment