திருத்தணிகை வேலா!
ஞானிகளைப் பழித்து அழிதல் ஆகாது
தனன தானனம் தனன தானனம்
தனன தானனம் ...... தனதான
பாடல்
பகலி ராவினுங் கருவி யாலனம்
பருகி யாவிகொண் ...... டுடல்பேணிப்
பருகி யாவிகொண் ...... டுடல்பேணிப்
பழைய வேதமும் புதிய நூல்களும்
பலபு ராணமுஞ் ...... சிலவோதி
அகல நீளமென் றளவு கூறரும்
பொருளி லேயமைந் ...... தடைவோரை
அசடர் மூகரென் றவல மேமொழிந்
தறிவி லேனழிந் ...... திடலாமோ
சகல லோகமும் புகல நாடொறுஞ்
சறுகி லாதசெங் ...... கழுநீருந்
தளவு நீபமும் புனையு மார்பதென்
தணிகை மேவுசெங் ...... கதிர்வேலா
சிகர பூதரந் தகர நான்முகன்
சிறுகு வாசவன் ...... சிறைமீளத்
திமிர சாகரங் கதற மாமரஞ்
சிதற வேல்விடும் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
பகல் இராவினும் கருவியால் அனம்பருகி ஆவி கொண்டு ...... உடல்பேணிப்
பழைய வேதமும், புதிய நூல்களும்,
பல புராணமும் ...... சில ஓதி,
அகல நீளம் என்று அளவு கூற உரும்
பொருளிலே அமைந்து ...... அடைவோரை,
அசடர் மூகர் என்று அவலமே மொழிந்து,
அறிவு இலேன் அழிந் ...... திடல் ஆமோ?
சகல லோகமும் புகல, நாள்தொறும்
சறுகு இலாத செங் ...... கழுநீரும்,
தளவும் நீபமும் புனையும் மார்ப! தென்
தணிகை மேவு செங் ...... கதிர்வேலா!
சிகர பூதரம் தகர, நான்முகன்,
சிறுகு வாசவன் ...... சிறைமீள,
திமிர சாகரம் கதற, மாமரம்
சிதற, வேல்விடும் ...... பெருமாளே.
Comments
Post a Comment