nanjinai polumana

சிதம்பர முருகா!
அடியேனுடைய உயிர்த்துணை நீயே. காத்து அருள்வாய்.




தந்தனத் தானதன தந்தனத் தானதன 
தந்தனத் தானதன ...... தந்ததான

பாடல்

நஞ்சினைப் போலுமன வஞ்சகக் கோளர்களை
நம்புதற் றீதெனநி ...... னைந்துநாயேன்

நண்புகப் பாதமதி லன்புறத் தேடியுனை
நங்களப் பாசரண ...... மென்றுகூறல்

உன்செவிக் கேறலைகொல் பெண்கள்மெற் பார்வையைகொல்
உன்சொலைத் தாழ்வுசெய்து ...... மிஞ்சுவாரார்

உன்றனக் கேபரமும் என்றனக் கார்துணைவர்
உம்பருக் காவதினின் ...... வந்துதோணாய்

கஞ்சனைத் தாவிமுடி முன்புகுட் டேயமிகு
கண்களிப் பாகவிடு ...... செங்கையோனே

கண்கயற் பாவைகுற மங்கைபொற் றோடழுவு
கஞ்சுகப் பான்மைபுனை ...... பொன்செய்தோளாய்

அஞ்சவெற் பேழுகடல் மங்கநிட் டூரர்குலம்
அந்தரத் தேறவிடு ...... கந்தவேளே

அண்டமுற் பார்புகழு மெந்தைபொற் பூர்புலிசை
அம்பலத் தாடுமவர் ...... தம்பிரானே.

பதம் பிரித்தல்

நஞ்சினைப் போலும் மன வஞ்சகக் கோளர்களை
நம்புதல் தீது என ...... நினைந்து, நாயேன்

நண்பு உகு அப் பாதம் அதில் அன்பு உறத் தேடி, உனை
நங்கள் அப்பா சரணம் ...... என்றுகூறல்

உன்செவிக்கு ஏறலைகொல், பெண்கள்மெல் பார்வையைகொல்,
உன்சொலைத் தாழ்வுசெய்து ...... மிஞ்சுவார் ஆர்,

உன் தனக்கே பரமும், என் தனக்கு ஆர் துணைவர்,
உம்பருக்கு ஆவதினின் ...... வந்து தோணாய்.

கஞ்சனைத் தாவி முடி முன்பு குட்டு ஏய,மிகு
கண்களிப் பாக விடு ...... செங்கையோனே!

கண்கயல் பாவை குற மங்கை பொன் தோள் தழுவு
கஞ்சுகப் பான்மை புனை ...... பொன்செய் தோளாய்!

அஞ்ச வெற்பு ஏழுகடல் மங்க, நிட்டூரர் குலம்
அந்தரத்து ஏற விடு ...... கந்தவேளே!

அண்டமுன் பார் புகழும் எந்தை பொற்பு ஊர்புலிசை
அம்பலத்து ஆடும் அவர் ...... தம்பிரானே.

Comments

  1. Ohm muruga. Utube லும் பார்க்கும்படி தரவேணும்

    ReplyDelete

Post a Comment