Thiruppugazh #180 aNi sevviyAr

அணி செவ்வியார் (வடதிருமுல்லைவாயில்)



முருகா!
அடியேன் ஆசைக் கடலினின்றும் கரை ஏறி,
உம்முடன் இரண்டறக் கலந்து இன்புற அருள் புரிவீர்
.

அணிசெவ்வி யார்திரை சூழ்புவி
தனநிவ்வி யேகரை யேறிட
அறிவில்லி யாமடி யேனிட ...... ரதுதீர

அருள்வல்லை யோநெடு நாளின
மிருளில்லி லேயிடு மோவுன
தருளில்லை யோஇன மானவை ...... யறியேனே

குணவில்ல தாமக மேரினை
யணிசெல்வி யாயரு ணாசல
குருவல்ல மாதவ மேபெறு ...... குணசாத

குடிலில்ல மேதரு நாளெது
மொழிநல்ல யோகவ ரேபணி
குணவல்ல வாசிவ னேசிவ ...... குருநாதா

பணிகொள்ளி மாகண பூதமொ
டமர்கள்ளி கானக நாடக
பரமெல்லி யார்பர மேசுரி ...... தருகோவே

படரல்லி மாமலர் பாணம
துடைவில்லி மாமத னாரனை
பரிசெல்வி யார்மரு காசுர ...... முருகேசா

மணமொல்லை யாகி நகாகன
தனவல்லி மோகன மோடமர்
மகிழ்தில்லை மாநட மாடின ...... ரருள்பாலா

மருமல்லி மாவன நீடிய
பொழில் மெல்லி காவன மாடமை
வடமுல்லை வாயிலின் மேவிய ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


அணி செவ்வியார், திரை சூழ்புவி,
தனம், நிவ்வியே கரை ஏறிட,
அறிவு இல்லியாம் அடியேன் இடர், ...... அதுதீர,

அருள் வல்லையோ? நெடு நாள் இனம்
இருள் இல்லிலே இடுமோ? உனது
அருள் இல்லையோ? இனம் ஆனவை ......அறியேனே.

குண வில்லதா மக மேரினை
அணி செல்வியாய் அருணாசல
குருவல்ல மாதவமே பெறு ...... குணசாத,

குடில் இல்லமே தரு நாள் எது?
மொழி, நல்ல யோகவரே பணி
குணவல்லவா! சிவனே! சிவ ...... குருநாதா!

பணி கொள்ளி, மாகண பூதமொடு
அமர் கள்ளி, கானக நாடக,
பர மெல்லியார், பரமஈசுரி ...... தருகோவே!

படர் அல்லி மாமலர் பாணம் அது
உடை வில்லி மாமதனார் அனை
பரி செல்வியார் மருகா! சுர ...... முருகஈசா!

மணம் ஒல்லை ஆகி நகா கன
தனவல்லி மோகனமோடு அமர்,
மகிழ்தில்லை மாநடம் ஆடினர் ...... அருள்பாலா!

மரு மல்லி மாவனம் நீடிய
பொழில் மெல்லி காவன மாடு அமை
வடமுல்லை வாயிலின் மேவிய ...... பெருமாளே.

Comments