Thiruppugazh #163 iththarani meedhil piravadhe

இத்தரணி மீதில் (பொதுப்பாடல்கள்)

முருகா!
முக்திநிலையை எனக்குத்
தந்தருள வேண்டுகிறேன்.


இத்தரணி மீதிற் ...... பிறவாதே
எத்தரொடு கூடிக் ...... கலவாதே
முத்தமிழை யோதித் ...... தளராதே
முத்தியடி யேனுக் ...... கருள்வாயே

தத்துவமெய்ஞ் ஞானக் ...... குருநாதா
சத்தசொரு பாபுத் ...... தமுதோனே
நித்தியக்ரு தாநற் ...... பெருவாழ்வே
நிர்த்தஜெக ஜோதிப் ...... பெருமாளே.

Comments