Thiruppugazh #144 vachana miga

பழநியப்பா!
ஆறெழுத்தை அன்புடன் ஓதி,
இம்மை அம்மை நலன்களை எய்த அருள்.
 


வசனமிக வேற்றி ...... மறவாதே 
மனதுதுய ராற்றி ...... லுழலாதே

இசைபயில்ஷ டாக்ஷ ...... ரமதாலே
இகபரசெள பாக்ய ...... மருள்வாயே

பசுபதிசி வாக்ய ...... முணர்வோனே
பழநிமலை வீற்ற ...... ருளும்வேலா

அசுரர்கிளை வாட்டி ...... மிகவாழ
அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே.

கருத்துரை
மெய்ஞ்ஞான சொரூபியே! 
பழநியாண்டவரே! 
அசுரகுலகால! 
அமரர் சிறை மீட்ட பெருமாளே! 
அடியேனுடைய மனது துன்பக்கடலில் விழாவண்ணம், 
தேவரீரை மறவாமல் சடக்கர மந்திரத்தை விதிப்படி ஜெபிக்கச் செய்து, 
இகபர வாழ்வை வழங்கி அருள்வீர்.

Comments