ஆசைகூர் பத்த (பொதுப்பாடல்கள்)
முருகா!
மந்திர மாலையை,
அழகிய பவளம் போல்
சிவந்த திருவடிகளில்
அணிவிக்கும் பாக்கியத்தைப் பெறுவேனோ?
முருகா!
மந்திர மாலையை,
அழகிய பவளம் போல்
சிவந்த திருவடிகளில்
அணிவிக்கும் பாக்கியத்தைப் பெறுவேனோ?
ஆசைகூர் பத்த னேன்மனோ பத்ம
மானபூ வைத்து ...... நடுவேயன்
பானநூ லிட்டு நாவிலே சித்ர
மாகவே கட்டி ...... யொருஞான
வாசம்வீ சிப்ர காசியா நிற்ப
மாசிலோர் புத்தி ...... யளிபாட
மாத்ருகா புஷ்ப மாலைகோ லப்ர
வாளபா தத்தி ...... லணிவேனோ
மூசுகா னத்து மீதுவாழ் முத்த
மூரல்வே டிச்சி ...... தனபார
மூழ்குநீ பப்ர தாபமார் பத்த
மூரிவே ழத்தின் ...... மயில்வாழ்வே
வீசுமீ னப்ப யோதிவாய் விட்டு
வேகவே தித்து ...... வருமாசூர்
வீழமோ திப்ப ராரைநா கத்து
வீரவேல் தொட்ட ...... பெருமாளே.
Comments
Post a Comment